வவுனியா மில் வீதியில் இருவழிப் போக்குவரத்துக்கு அனுமதி

வவுனியா, மில் வீதியில் இருவழிப் போக்குவரத்து மேற்கொள்ள வவுனியா பொலிசார் அனுமதி வழங்கியதையடுத்து ஒரு வழிப் போக்குவரத்து குறியீட்டு பலகை அங்கிருந்து இன்று அகற்றப்பட்டது.

வவுனியா, மில் வீதியில் கடந்த சில வருடங்களாக ஒரு வழிப் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கபட்டிருந்ததுடன், ஒரு வழிப் போக்குவரத்து குறியீடும் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் மில் வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு வந்து செல்வோர் தொகை குறைவாக இருந்தது. இது வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைகளை பாதித்தமையால் மில் வீதியை இரு வழி போக்குவரத்துக்கான வீதியாக மாற்றுமாறு வர்த்தகர்கள் நீண்டகாலமாக கோரி வந்தனர்.

இந்நிலையில், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீதிப்பாதுகாப்பு கூட்டத்தில் வர்த்தக சங்கத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மில் வீதியை இரு வழிப் போக்கவரத்துக்கான வீதியாக மாற்றுவற்கு பொலிசார் அனுமதி வழங்கியதையடுத்து அங்கிருந்து ஒரு வழி போக்குவரத்து குறியீடு அகற்றப்பட்டு, இரு வழிப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்