மன்னார் எருக்கலம்பிட்டி மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற பரிசளிப்பு விழா

  மன்னார்  நிருபர் 
27-07-2018
மன்னார் வலயக்கல்வி பணிமனைக்குற்பட்ட எருக்கலம் பிட்டி மகா வித்தியாலத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா   இன்று  (27) வெள்ளிக்கிழமை  மாலை 2 மணியளவில் எருக்கலம் பிட்டி மகா வித்தியாலய கல்லூரி அதிபர்  செல்வரட்ணம் செல்வரஞ்சன் தலைமையில் கல்லூரியின்  பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்   பைசர் முஸ்தப்பா, வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்,   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்   ஆகியோர் கலந்து  கொண்டு சிறப்பித்தனர்.
 இதன் போது கடந்த 2017  ஆம்  ஆண்டு  கல்வியில் திறமை சித்தி பெற்ற  மாணவர்களுக்கும், பல்கலைக் கழக  அனுமதி  பெற்ற  மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும்  வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அதிபர்,ஆசிரியர்,  பழைய  மாணவர்கள் , பெற்றேர்கள் உற்பட  பல  நூற்று கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்