குடிமனைக்கு அண்மையில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்

வவுனியா நகரப்பகுதியில் நகரசபை ஊழியர்களினால் அகற்றப்படும் குப்பைகள், கழிவுகள் நகரசபை எல்லைக்குட்பட்ட தட்சணாங்குளம் பகுதியிலுள்ள குளத்திற்கு அருகில் கொட்டப்பட்டு எரியூட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரசபை ஊழியர்கள் நகரப்பகுதியில் அகற்றப்படும் குப்பைகள், கழிவுகளை தமது உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்று நகரசபையின் எல்லைக்குட்பட்ட பண்டாரிக்குளம், தட்சணாங்குளம் பகுதியிலுள்ள குளக்கட்டு வீதிகளில் கொட்டப்பட்டு எரியூட்டி வருகின்றனர். இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இப்பகுதியில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதும் இம்மக்களின் குற்றச்சாட்டுத் தொடர்பாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, நாங்கள் தட்சணாங்குளம் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு அனுமதிக்கவில்லை. என்ன காரணத்திற்குக் கொட்டியுள்ளார்களோ தெரியவில்லை. பம்மைபடுப் பகுதியிலே குப்பைகள் கொட்டுவதற்கு நகரசபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ் விடயத்தை கவனத்தில் எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்