ஜனாதிபதி தன்னை விமர்சிக்கவில்லை – அர்ஜுன ரணதுங்க

ஜனாதிபதி தன்னை விமர்சித்ததாக பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.வெளிவேரிய கிரிக்கித்த ஸ்ரீ பமுனு பௌத்த மத்தியஸ்தானத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பௌர்ணமி விசேட சமய நிகழ்வின் பின்பு ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நான் அமைச்சரவையில் இடம்பெறுகின்றவற்றை வெளியில் சொல்பவன் அல்ல. ஆனால் இதை நான் சொல்ல வேண்டும். அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் ஜனாதிபதி என் மீது குறை கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்படி ஒரு செய்தியை ஊழல்வாதிகளுடன் தொடர்புடைய பத்திரிக்கையிலேயே வெளியானது. இந்த செய்தியானது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் எமது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். ஜனாதிபதி அப்படியொரு வார்த்தையை தெரிவித்திருப்பார் என்று நான் ஓருபோதும் நினைக்கமாட்டேன். அது ஒரு போலியான செய்தி. மக்கள் செல்வாக்கற்ற அரசியல் பலமற்றவர்களே இந்த மாதிரியான செய்திகளை வெளியிடுவார்கள்.

அவர்கள் பின்கதவால் பதவிக்கு வர நினைக்கின்றனர். அவர்கள் ஊழலின் மூலம் கருப்பு பணத்தை சம்பாதித்தவர்கள். அதனால் தான் கடந்த தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்