தமிழ் தேசிய வீரர்கள் தினத்தையொட்டி – இரத்ததான நிகழ்வு

மன்னார் நிருபர் 
(27-07-2018)
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட ஸ்தாபக தலைவர்கள்,போராளிகள், பொது மக்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  இன்று வெள்ளிக்கிழமை (23) காலை வவுனியாவில்  இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய வீரர்கள் தினமான  இன்று வெள்ளிக்கிழமை (27) காலை வவுனியா பொது வைத்தியசாலையில் டெலோ கட்சியின் வவுனியா   உதவி மாவட்ட பொறுப்பாளர் ஏ.நாகராஜன் தலைமையில் இடம் பெற்ற குறித்த  இரத்த தான நிகழ்வை கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் டெலோ  வவுனியா மாவட்ட அலுவலகம் மற்றும் டெலோவின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரின் ஒத்துழைப்புடன் குறித்த இரத்த தான நிகழ்வு இடம்  பெற்றது.
1983 ஆம் ஆண்டு  ஜுலை மாதம் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட டெலோ கட்சியின் முன்னால் தலைவர் தங்கண்ணா, தளபதி குட்டிமணி , முன்னணி போராளிகள் ஜெகன் , தேவன் ,ஆகியோர்  உற்பட அனைவரினதும் 35 ஆவது ஞாபகார்த்தமாக குறித்த இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்