ரயில் தண்டவாளங்களை திருடிய இருவர் கைது

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தை திருடிய இருவரை இன்று (27) காலை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் வாத்தியாகம மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்துசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புதிய தண்டவாளத்திற்கு அருகில் கழற்றி வைக்கப்பட்டிருந்த பழைய தண்டவாளங்களையே குறித்த சந்தேக நபர்கள் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்கள் இரும்புக்காக திருடி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்