டுபாயில் பலத்த பாதுகாப்பில் இருந்த நீல மாணிக்கத்தை திருடிய திருடன் -அதிர்ச்சியில் பொலிஸார்

டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் 20 மில்லியன் பெறுமதியான நீல மாணிக்கம் ஒன்றை இலங்கையைர் ஒருவர் திருடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 25 ஆம் திகதி குறித்த நபர் இந்த மாணிக்கத்தை திருடி பின்னர் அதனை அவருடைய உறவினர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபரின் உறவினர் நேற்று (26) மாணிக்கத்தை ஒரு பாதணி பெட்டியில் வைத்து இலங்கைக்கு கூரியர் சேவை மூலம் அனுப்பியதை அடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நீல மாணிக்கத்தை பாதுகாத்து வைத்திருந்த பெட்டகம் 3 கதவுகள் கொண்டு மூடப்பட்டிருந்ததாகவும் அதனை எவ்வாறு திருடியது என்பது தொடர்பில் பொலிஸாரிற்கு பெறும் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திருட்டை கண்டுபிடிப்பதற்கு டுபாய் பொலிஸார் 120 நபர்களை விசாரணை செய்துள்ளதுடன் சீ.சீ.டீ.வி கெமராக்களை சுமார் 8620 மணித்தியாளங்கள் சோதணையிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்