முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி  வெற்றி

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் பெரேரா 81,என்.பெரேரா 49 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ரபாடா,சம்சி இருவரும் தலா நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு194 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியுள்ளது.

அவ்வணி சா்பாக டுமினி 53, டி கொக்,பிளசிஸ் இருவரும் தலா 47 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் தனஞ்செய 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக சம்சி தெரிவானார்.

Sri Lankan cricketer Akila Dananjaya celebrates after he dismissed South Africa’s Hashim Amla during the first One Day International (ODI) cricket match between Sri Lanka and South Africa at the Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla on July 29, 2018. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்