நான் இப்படியே ஓய்வு பெறுவேன்!- மலிங்க

தாம் ஓய்வு பெறுவதற்கு தயாராகும் போது, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் தமது ஓய்வை அறிவிக்கவிருப்பதாக லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக அவருக்கு இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தாம் தற்போதும் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கின்ற போதும், தமது திறமை கருத்தில் கொள்ளப்படுகிறதா? என்ற சந்தேகம் தமக்கு உண்டு.

அத்துடன் திறமை அடிப்படையில் அணித்தேர்வு இடம்பெற்றால், தாமே 20க்கு20 போட்டிகளில் அணிக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய முதல்நிலை வேகப்பந்து வீச்சாளர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்