இலங்கை, தென்னாபிரிக்க இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை

சுற்றுலா தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பமாகின்றது.

இந்தியாவிற்கு எதிராக பேமிங்ஹாமில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும்.

இங்கிலாந்து 1877 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.

இந்த நிலையில், நாளை ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்