15 வருடங்களுக்கு பின்னர் பூமியை அண்மிக்கும் செவ்வாய்க்கிரகம்

15 வருடங்களிற்கு பின்னர் செவ்வாய்க்கிரகம் தனது சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ளது.

சூரியன் மறையும் வேளையில், கிழக்கு வானில் செவ்வாய் கிரகத்தைக் காணமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் கோள்மண்டல கற்கைத் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிரகம் பூமியிலிருந்து 57.6 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் பூமியை கடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, செவ்வாய்க்கிரகத்தை பார்வையிடுவதற்கு விசேட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று (31) இரவு 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை விண்ணைப் பரிசோதிப்பதற்காக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனை, பல்கலைக்கழகத்தின் பாரியளவிலான தொலைநோக்கு கருவிகளை பயன்படுத்தி பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்