கிறிஸ் கெயிலுக்கு ஓய்வு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நாளை (01) செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் கவுர்ட்ணி பிரவுன் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையுடன் முன்னணி வீரர்கள் முரண்பட்டு, போட்டிகளில் பங்கேற்க மறுத்து வரும் நிலையில், கிறிஸ் கெயில் தொடர்ந்தும் ஒருநாள் மற்றும் ரி-20 அணிகளில் விளையாடி வருகின்றார். இறுதியாக, இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக பதினொருவர் அணிக்கு எதிரான கண்காட்சி ரி-20 போட்டியில் கெயில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியிருந்தார்.

தற்போது கிறிஸ் கெயிலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக துடுப்பாட்ட வீரர் செட்விக் வோல்டன் மற்றும் பந்து வீச்சாளர் ஷெல்டோன் கொட்ரெல் ஆகியோர் 13 பேர் கொண்ட அணிக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்