நான் கண்டிப்பாக தமிழ் மொழியை கற்றுக்கொள்வேன்: டோனி சத்தியம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மைதானத்தில் மதுரை பாந்தெர்ஸுக்கும், கோவை கிங்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டத்தை கண்டுகளிக்க கிரிக்கெட் வீரர் டோனி வந்திருந்தார்.

ஆட்டம் தொடங்கும் முன் டாஸ் போடும்போது அங்கு கூடியிருந்த ரசிகர்களின் கரகோஷத்துக்கிடையில் பேசிய டோனி, இங்கு நான் டிஎன்பிஎல் போட்டிகளைக் காண வந்துள்ளேன்.

ஒவ்வொரு முறை ஐபிஎல் நடக்கும் போதும் நான் சிறிது தமிழ் கற்றுக்கொள்வேன். ஆனால் அடுத்த ஐபிஎல் தொடரின்போது எல்லாம் மறந்துபோய்விடுகிறது. அடுத்த ஐபிஎல் தொடருக்குள் கண்டிப்பாக நன்றாக தமிழ் கற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்