மீண்டும் வருகிறார் மலிங்க..?

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டியின் போது அவர் இலங்கை அணியில் உள்வாங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு நீண்டகாலமாக அணியில் இடம் வழங்கப்படவில்லை.

இதனால் தாம் ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்து வருவதாக அவர் பல தடவைகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்