நான்காவது ஒருநாள் போட்டி இன்று…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அணியுடனான எஞ்சிய இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு, தென்னாபிரிக்க அணியின் தலைவராக குயின்டன் டி குக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியுடனான மூன்றாவது போட்டியில் போது தென்னாப்பிரிக்க அணித் தலைவர் பஃப் டு ப்ளெசி காயமடைந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டியின் தலைவராக குயின்டன் டி குக் பெயரிடப்பட்டுள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3க்கு 0 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்