வழுக்கை தலையில் முடி வளர! இதை செய்திடுங்கள்…

பெண்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகளில் மிக முக்கியமாக ஒன்று அதிகப்படியான முடி உதிர்ந்து தலையில் வழுக்கை உண்டவதே.

தலைப்பகுதிகளில் காணப்படும் ஃபோலிகிள் எனப்படும் சிறு துவாரங்கள் தான் முடிகளுக்கு உறுதியை அளிக்கின்றன. மேலும் தலையில் வழுக்கை விழுவதற்கு இந்தத் துவாரங்கள் மிகவும் சிறிய அளவில் குறுகுவதே காரணமாக உள்ளது.

பொதுவாக பெண்களுக்கு வகிடு எடுக்கும் இடத்திலும் வழுக்கை அதிகமாக விழத் தொடங்கும். இதனால் அவர்களுக்கு தொடர்ந்த பரவலான முடி உதிர்வு ஏற்பட அதிகமாக வழிவகுக்கும். மேலும் இதனால் பல பெண்கள் இன்று மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர்.
இதற்கான காரணங்கள்
குடும்பத்தின் பரம்பரையை பொறுத்து வழுக்கை ஏற்படும்.
வயது முதிர்ச்சி மற்றும் அவர்களின் தவறான உணவு முறைகளினாலும் வழுக்கை ஏற்படும்.
அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு அதிகப்படியான முடி உதிர்ந்து வழுக்கை தோன்றும்.
நீண்ட நாட்களாக மாதவிடாய் வரமால் நிற்பதினாலும் தலையில் முடி உதிரும்.
முடி வளர டிப்ஸ்
வீட்டில் எளிதில் கிடைக்கும் ஐஸ் கட்டியை எடுத்து அதிகபடியாக முடி உதிர்ந்த இடத்தில் தடவினால் முடி நன்கு வளரும்.
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து, அத்துடன் பாசிப்பருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்வு நிற்கும்.
கற்றாழை சாறில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது, அடர்த்தியாகும் நன்றாக வளரும்.
சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வது குறையும், வாரம் இருமுறை செய்யலாம்.
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் கருகருவென வளரும்.
முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளிக்கலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்