இந்தியா – இங்கிலாந்து இரண்டவது டெஸ்ட் தொடர் இன்று

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடர் இன்று லண்டனிலுள்ள லோர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 போட்டித் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடர் இன்று லண்டனிலுள்ள லோர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த இருபதுக்கு 20 போட்டித் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்போட்டியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இருப்பினும் டேவிட் மாலன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அணியில் இல்லாததன் காரணாக மோயின் அலியுடன், 20 வயதாகும் அறிமுக வீரர் ஆலிவர் போப்பும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்