கருணாநிதிக்கு பிடித்த வீரர் இவர்தான்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கிரிக்கெட் விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும்.

கிரிக்கெட் போட்டியை மிகவும் விரும்பி பார்க்கும் இவரிடம் 2013 ஆம் ஆண்டு உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு கோப்பை வாங்கி கொடுத்த அப்போதைய அணித்தலைவர் கபில் தேவை பிடிக்கும். மேலும் எப்போதும் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தல டோனி என்று பதிலளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்