இந்தியாவில் புதிய பரிமாணத்துடன் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் விலை ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி டேப் ஏ (2018) இந்தியாவில் சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் ப்ளிப்கார்ட்-இல் விற்பனை செய்யப்படுகிறது மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இது எபோனி பிளாக் மற்றும் அர்பன் புளு நிறங்களில் கிடைக்கிறது மற்றும் இதில் பல சிறப்பம்சங்களும் அடங்கியுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்:
10.5 இன்ச் 1920×1200 பிக்சல் WUXGA 16:10 ரக TFT எல்.சி.டி. டிஸ்ப்ளே
1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
அட்ரினோ 506 GPU
3 ஜிபி ரேம்
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
5 எம்பி செல்ஃபி கேமரா
4 ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
4ஜி எல்டிஇ, வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 டைப்-சி
7,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய கேலக்ஸி டேப் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.2750 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

இதனை பெற பயனர்கள் ரூ.198 அல்லது ரூ.299 சலுகைகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் அடுத்த நான்கு ரீசார்ஜ்களுக்கு டபுள் டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்