ஓஷவா பகுதியில் கத்திக்குத்து- 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஓஷவா பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், படுகாயமடைந்த 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Adelaide Street மற்றும் பூங்கா வீதி அருகேநேற்று (வியாழக்கிழமை) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதமே கத்தி குத்து தாக்குதலுக்கு காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் 3 ஆவது நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

எனினும் கைது செய்யப்பட்டவர் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்