ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடை-பிரித்தானியாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது!

ரஷ்யா மீதான தடை சர்வதேச சட்டத்தின் பிரகாரம் முரணானது என்றும், இவ்வாறு தடை விதிக்க காரணமாக இருந்த பிரித்தானியாவின் குற்றச்சாட்டை ஏற்கவும் முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் வசிக்கும் ரஷ்யாவின் முன்னாள் உளவாளிகள் இருவருக்கு நரம்பை முழுமையாக தாக்கும் நோகோவிச் என் நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ரஷ்யாவிற்கு நேரடி தொடர்பு இருப்பதாக பிரித்தானியா அறிவித்திருந்தது. இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பின் போது இந்த விடயத்தை பிரதமர் மே வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு ரஷ்யா தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் போது அவர் கோரியிருந்தார். குறித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ரஷ்யாவின் மீது புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்நிலையில் அவை, அமெரிக்காவின் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் முரணானது என ரஷ்யா கிரெம்ளின் பேச்சாளர் தெரிவித்ததுள்ளார்.

மேலும் பிரித்தானியா ஏதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை எம்மீது சுமத்துகின்றது என்பது தெரியவில்லை. அத்துடன் அவர்களுடைய குற்றச்சாட்டை ஏற்கமுடியாது என அவர் மேலும் கூறினார்.

அத்துடன் அமெரிக்காவுடன் நல்லுறவினை ஏற்படுத்தவே ரஷ்யாவின் விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்