ஷேரு கிளசிக் உடற்கட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமில முனசிங்ஹ

இந்தியாவின் புதுடில்லி நகரில் இடம்பெற்ற ஷேரு கிளசிக் உடற்கட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமில முனசிங்ஹ நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

உலகின் முன்னணி IFBB உடற்கட்டுப் போட்டியான ஷேரு கிளசிக் 2018 போட்டி கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை புதுடில்லியில் நடைபெற்றது.162 நாடுகளின் போட்டியாளர்கள் பங்குபற்றிய 85 கிலோ எடை பிரிவில் உலக கிண்ணத்தை அமில முனசிங்ஹ வெற்றி பெற்றார்.

அமில முனசிங்ஹவின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி, தாய்நாட்டின் புகழை சர்வதேச மட்டத்தில் கொண்டு சென்றமைக்காக நன்றி தெரிவித்தார். அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெறவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் புத்திக பத்திரனவும் கலந்துகொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்