தமிழ்நாடு பிரீமியர் லீக்-இறுதிபோட்டிக்கான இரண்டாவது தகுதிசுற்றுக்கு லைக்கா முன்னேற்றம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் வெளியேற்று சுற்று போட்டியில், காரைக்குடி காளை அணியை வீழ்த்தி, லைக்கா கோவை கிங்ஸ் அணி, இரண்டாவது இறுதிபோட்டிக்கான தகுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி, 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி, இன்று நடைபெறும் இரண்டாவது இறுதிபோட்டிக்கான தகுதிசுற்று போட்டியில் மதுரை பந்தர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

நேற்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காரைக்குடி காளை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய லைக்கா கோவை கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது, அணியின் அதிகபட்ச ஓட்டமாக அபினவ் முகுந்த் 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் ராஜ்குமார் 4 விக்கெட்டுகளையும், கிருஸ்ணகுமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய காரைக்குடி காளை அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 113 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அந்த அணி 24 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இதில், மாண் பஃப்;னா 40 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் நடராஜன் 4 விக்கெட்டுகளையும், கிருஸ்ணமூர்த்தி விக்னேஷ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட அபினவ் முகுந்த் தெரிவுசெய்யப்பட்டார்.

இன்று நடைபெறும் இரண்டாவது இறுதிபோட்டிக்கான தகுதிசுற்று போட்டியில் வெற்றிபெறும் அணி, எதிர்வரும் 12ஆம் திகதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதி போட்டியில், திண்டுக்கல் டிரகன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்