ரயில் ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

ரயில் ஊழியர்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தினால் இன்னும் தீர்வு முன்வைக்கப்படாமையை கண்டித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பில் ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர். மேலும் இப்போராட்டத்துக்கு 5 தொழிற்சங்கள்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இப்பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்காத ஊழியர்களின் ஊடாக கொழும்பு- கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலி, அவிசாவளை, ரம்புக்கனை, கண்டி, சிலாபம் மற்றும் மஹவ ஆகிய பகுதிகளுக்கான ரயில் சேவை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்