எரிபொருள் விலை அதிகரிப்பு -இன்று முடிவு தெரியும்!!

உலக சந்தை விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு அமைய இலங்கையில் எரிபொருள்களின் விலைகளை அதிகரித்தல் அல்லது குறைத்தல் தொடர்பாக இன்று முடிவெடுக்கப்படும் என்று அறியமுடிகிறது.

இது தொடர்பாக இன்று பிற்பகல் ஆராயப்படவுள்ளது.

கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் சூத்திரத்திற்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவுடன் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

உலக சந்தையில் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளதால், நாட்டில் மீண்டும் எரிபொருள்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்