நாக்கில் கொப்புளங்களை குணப்படுத்தும் இயற்கை முறைகள்!

மிக சூடான உணவு உண்பது, அதிகமாக புகைபிடித்தல், விட்டமின் பி குறைபாடு, அதிக கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதால் நாக்கில் ஒரு விதமான கொப்புளங்கள் உண்டாகும். இவை மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக இருக்கலாம், அதை சுற்றி சிவப்பாகவும் காணப்படும், இதனை குணப்படுத்தும் இயற்கை முறைகள் பற்றி பார்க்கலாம்.குணப்படுத்தும் முறைகள் நாக்கின் புண் உள்ள பகுதியின் ஐஸ் கட்டியை வைத்து மெதுவாக தேய்க்கும் புண்ணை மரத்து போக செய்து உடனடி நிவாரணம் கொடுக்கும், அதிகமாக குளிர்ந்த நீரை குடிப்பதாலும் நிவாரணம் பெறலாம். ஒரு டீஸ்பூன் உப்பை மிதமான சூடுள்ள நீரில் கலக்கி, 30 விநாடிகளுக்கு இந்த நீரை வாயில் வைத்து துப்பி விடவும், தினமும் 5 முறை இதை செய்தால் கொப்புளங்கள் குணமாகும்.

ஒரு கப் சூடான நீரில் 1 டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்து சில நிமிடங்களுக்கு நாக்கு மற்றும் வாயின் எல்லா பாகத்திலும் படுமாறு வைத்திருந்து பின் அதை வெளியே துப்பவும். தினமும் நாம் அருந்தும் பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை குடித்து வருவதன் மூலம் புண்கள் குணமாகும்.

சோற்று கற்றாழையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நாக்கு கொப்புளங்களை குணப்படுத்தும். இதன் இலையில் இருந்து அதன் மிருதுவான பாகத்தை பிரித்து எடுத்து கொப்புளங்கள் மீது தடவி 5 நிமிடங்களுக்கு பின் உங்கள் வாயை மிதமான சூடுள்ள நீரில் கழுகவும்.

முதல் 4 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை துளசி இலைகளை கழுவி பின் அவற்றை வாயில் இட்டு நன்றாக மென்று சிறிது தண்ணீரை சேர்த்து விழுங்கவும்.

செய்ய வேண்டியவை:

  • அதிக அளவு குளிர்ந்த நீர், குளிர் பால் அல்லது பழச்சாறுகள் நிறைய குடிக்கவும்.
  • நல்ல மௌத்வாஷ் பயன்படுத்தி தினமும் பற்களை நன்கு துலக்கி பக்டீரியா அல்லது எரிச்சலை நீக்கவும்.
  • உண்ணும் உணவில் அதிக இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும்.

செய்ய கூடாதவை:

  • நாக்கு கொப்புளங்கள் உள்ள போது, காரமான அல்லது அமில உணவுகள் தவிர்ப்பது மிக நல்லது.
  • தேநீர் அல்லது காபி போன்ற சூடான பானங்களை தவிர்க்கவும்.
  • அடிக்கடி நாக்கு கொப்புளங்கள் தொல்லை என்றால் கடைகளில் கிடைக்கும் சோடியம் லாரில் சல்பேட் கொண்டிருக்கும் பற்பசை பயன்படுத்துவத்தை தவிர்க்கவும்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு உங்கள் நாக்கில் உள்ள கொப்புளங்கள் நீடித்தால், மருத்துவரை அணுகி அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்