விளையாட்டுக்கழகங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு

தனது 2018ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியின் கீழ் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 06 விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்துள்ளார்.

இன்று 10.08.2018 வெள்ளிக்கிழமை காலை 09 மணியளவில் வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விளையாட்டு உபகரணங்களை மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீமுருகன் ஐக்கிய வி.க, சுழிபுரம் காந்திஜி வி.க, கரவெட்டி கிழவிதோட்டம் வி.க, புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகுகள் வி.க, கந்தரோடை மக்கள்முன்னேற்றக்கழக வி.க, மருதங்கேணி சிவனொளி வி.க, ஆகிய விளையாட்டுக்கழகங்களுக்கே வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி.கிழக்கு(கோப்பாய்) பிரதேச சபை உறுப்பினர் சி.அகீபன், வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அம்பன் நிதர்சன், வடமாகாண விளையாட்டுத்திணைக்கள உத்தியோகத்தர் ச.தமிழன்பன் மற்றும் பயனாளிகளான விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்