ரயில் மோதி 20 பசுமாடுகள் பலி!

டெல்லியில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 20 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டம் கல்கா நகரில் இருந்து டெல்லியின் வடமேற்கு பகுதியில் நரேலா நகருக்கு கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை சென்றுகொண்டிருந்தது. 

டெல்லியின் ஹோலிம்பி காலன் மற்றும் நரேலா ரயில் நிலையங்களுக்கு இடையே குறித்த ரெயில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த தண்டவாளத்தை பசுமாடுகள் கூட்டமாக கடந்து செல்ல முயன்றன.

இதைப்பார்த்ததும் ரயிலின்  நடத்துனர் ‘எமர்ஜென்சி பிரேக்’கை பயன்படுத்தினார். ஆனாலும் ரயில் அதிகவேகத்தில் சென்றதால் நிற்காமல் மாடுகளின் மீது மோதிவிட்டு சென்றது.

குறித்த சம்பவத்தில்  20 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ரயில் தண்டவாளத்தில் சிறிய அளவில் சேதாரங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மாடுகளின் உடலை அப்புறப்படுத்திவிட்டு, தண்டவாளத்தை சரி செய்தனர். இதையடுத்து அங்கு ரயில் போக்குவரத்து சீரானமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்