வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதிய வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபராக அனுர அபய விக்கிரம  பதவியேற்றார்.

குறித்த பதவியேற்பு நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.பொலிஸாரின் அணி நடை மரியாதையுடன் ஆரம்பமான இந் நிகழ்வின் பின்னர் சமயத்தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் கையொப்பமிட்டு பதவியினை ஏற்றுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் , கணக்காளர் , வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியாவிலுள்ள ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வவுனியா பொலிஸார், சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.