இருபதுக்கு 20 போட்டி தொடரின் வாய்ப்பை இழந்த மலிங்க

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இப் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க விளையாட வாய்ப்புள்ளதாக துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்திருந்தார்.

எனினும் நேற்றுமுன்தினம் தென்னாபிரிக்காவுடன் மோதவுள்ள இலங்கை அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அதன்படி இக் குழாமில் லசித் மலிங்கவின் பெயர் இடம்பெறமை ரசிகர்களுக்கும் மலிங்கவுக்கும் சோகத்தை அளித்துள்ளது.

இந் நிலையில் லசித் மலிங்க இலங்கை அணியிலிருந்து தொடர்ந்தும் ஓரம் கட்டப்பட்டு வருவது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. லசித் மலிங்க தனக்கு உடற் தகுதி இருக்கின்றது என்பதையும் நிரூபித்து விட்டார். தான் இன்னும் திறமையோடுதான் பந்து வீசுகின்றேன் என்று உள்ளூர் போட்டிகளிலும் ஆடிக் காட்டி விட்டார்.

ஆனாலும் மலிங்கவுக்கான‍ இடம் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றமை ஏன் என்று தெரியவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்