எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே – சபாநாயகர் அறிவிப்பு

எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வழங்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் இன்று காலை அறிவித்ததையடுத்து, சபாநாயகரின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எதிர்க் கட்சிப் பதவி எமக்கு வழங்கப்பட வேண்டும் என பொது எதிரணியினர் கோஷம் எழுப்பி சபையில் குழப்பம் விளைவித்தனர்.

ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பொது எதிரணியினர், உங்களின் தீர்மானத்தை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. நீங்கள் நடுநிலையாக நடந்துகொள்ளவில்லை. நாங்கள் இந்த நாட்டின் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு வந்துள்ளோம், நீங்கள் இன்று நடந்து கொண்ட விதத்தில் மக்களின் வரப்பிரசாதத்தை மீறும் வகையில் அமைந்துவிட்டது. மக்கள் குரலை நீங்கள் நிராகரித்துள்ளீர்கள் என சபாநாயகர் கருஜயசூரியவிடம் கூறினார்.

இதன்போது கருத்தது தெரிவித்த சபாநாயகர், ஆம் நான் அவ்வாறு தான் செய்தேன், இத்துடன் உங்களின் கருத்தினை நிறுத்துங்கள் எனக் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்