சுதந்திரக்கட்சி விலகி செயற்பட்டால் முழு ஆதரவினையும் வழங்குவோம் – டிலான்

தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விலகி செயற்பட்டால்தான் அதனுடைய அனைத்து செயற்பாடுகளுக்கும் தங்களுடைய முழு ஆதரவினையும் வழங்குவோமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இவ்விடயத்தில் உரிய தீர்வினை மேற்கொள்ளாவிடின் கட்சியின் அடுத்த வருடாந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகளில் நிபந்தனைகளுடனே பங்கு பற்றுவோமெனவும் டிலான் பெரேரா  கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்