புத்தளம் பொது பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு!

வடமேல் மாகாணத்திலுள்ள பொது பரிசோதகர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புத்தளம், தலவில் ஆலய உற்சவத்தின் போது வழங்கப்பட்டு வந்த மேலதிக கொடுப்பனவுகளை புத்தளம் மாவட்ட சுகாதார அதிகாரி அலுவலகம் நிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொது பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த  பணிப்புறக்கணிப்பு காரணமாக மருத்துவ நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் டெங்கு நுளம்பு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முடங்கியுள்ளமையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது பரிசோதகர்களும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களுடைய பிரச்சினைக்கு  தீர்வு கிடைக்காவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்