பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய அரசாங்கத்திற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக மாநில அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக இந்திய அரசாங்கம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, 7 பேரை விடுவிக்க மறுத்த இந்திய ஜனாதிபதியின் உத்தரவு ஆவணம் 7 பேர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, 7 பேரை விடுவிப்பது தொடர்பாக இந்திய அரசாங்கம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியது.

இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்குமாறு இந்திய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. 7 பேரை விடுவிப்பதில் தங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்