அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் இன்று வெள்ளிக்கிழமை (10) மிக சிறப்புடன் நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ ஆதி சௌந்ததராஜ குருக்களின் பூசை கிருயைகளைத் தொடர்ந்து ஆலய வண்ணக்குமார்களால் வடம் பிடித்து பக்தர்களுக்கு கையளிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரரின் தேரோட்டம் நடைபெற்றது

இலங்கையின் மிக உயரமான ரதங்களில் ஒன்றாகவும், திராவிட மரபு, முகப்புத்திர சிற்ப மகா ரதமாக இத் தேர் புகழ்பெற்று விளங்குகின்றது.

கடந்த 02ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் சனிக்கிழமை பகல் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது

இந்த ரத உற்சவ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடகிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கனக்கானோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்