இலங்கை நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளிற்கான குழுவிற்கு கடிதமொன்றை  அனுப்பிவைத்திருந்த இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகள் தயான் ஜயதிலக நியமிக்கப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் காரணமாக நாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் என தெரிவித்திருந்தனர்.

தயான் ஜயதிலகவின் கொள்கையும் 2015 ஜனவரி 8 இயக்கத்தை வழிநடத்திய கொள்கையும் முற்றுமுழுதாக வெவ்வேறானவை எனவும் சிவில் சமூகத்தினர்  தமது கடிதங்களில் தெரிவித்திருந்தனர்.