கனடா – இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையில் உடன்படிக்கை.

கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் இலங்கையின் உள்ள இரண்டு அரச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படவுள்ளன.

கல்வி, ஆய்வு உள்ளிட்ட பல்கலைக்கழக பீட மாணவர்கள், ஊழியர்களுக்கிடையில் இது தொடர்பான அறிவை பரிமாறிக்கொள்வதற்கும், இரட்டை பட்ட நெறி திட்டம் பிஎச்டி Cotutelle Program முன்னெடுப்பது தொடர்பில் இந்த பல்கலைக்கழகத்திற்கும் இலங்கையில் உள்ள குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.கனடா Calgary பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜனக ருவான்புர, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கே.கே.சி.கே பெரேராவுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதே போன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சம்பத் அமரதுங்க பட்ட படிப்பு கற்கை நெறிக்கான பீடாதிபதி பேராசிரியர் ஹேமந்தி ரணசிங்கவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையின் கீழ்  Canadian Queen Elizabeth II Diamond Jubilee Scholarships (QES)  திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.

இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திட்ட நிகழ்வில் இலங்கை உயர்கல்வி அமைச்சினதும் பல்கலை கழக மானிய ஆணைக்குழு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்