மான் வேட்டையாடிய இருவர் பொலிஸாரால் கைது!

புத்தளம், மகாகும்புக்கடவலப் பகுதியில் மானை வேட்டையாடிய இருவரை பொலிஸார்  இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர்.

இந்தச்  சம்பவத்தில் மகாகும்புக்கடவலப் பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரங்குளி பொலிஸ் காவரன் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸ் குழு அப்பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டபோது, வேட்டையாடப்பட்ட மானுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட மான் 64 கிலோ கிராம் எடையுடையதென  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம்  முந்தல் பொலிஸ் அவர்களை  புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்