வேகக்கட்டுப்பாட்டைஇழந்த பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்.

அம்பலாந்தொட்ட – நோனாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பங்களுடன் மோதுண்டு நொதகம கங்கையில் வீழ்ந்தமையினாலேயே இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது அம்பலாந்தொட்ட, நோனாகம பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதியும், நடத்துனரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பேருந்து மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதுடன், ஹூங்கம பொலிஸார் மேலுதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்