கல்வி அபிவிருத்திக்கு இந்தியா நிதி உதவி – இராதாகிருஸ்ணன்

மலையகப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாய் நிதி வழங்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.தெரிவித்துள்ளார்.

இந்த நிதியில் மத்திய மாகாணத்தில் ஆறு பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளும், சப்ரகமுவ மாகாணத்தில் ஒரு பாடசாலையையும் அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மத்திய மாகாண கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

 

இதேவேளை இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய 95 மில்லியன் ரூபாவே இன்று சரஸ்வதி வித்தியாலயத்தின் அபிவிருத்திக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன் இந்த நிதியைப் பெற்றுத் தருவதற்கு கல்வி அமைச்சின் ஊடாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஆகியோர் உதவியுள்ளதையும் இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கம் பாரிய நிதியை கல்வி அபிவிருத்திக்காக வழங்கி வருகின்றமை பாராட்டிற்குரிய விடயமெனவும் இதனை அரசாங்கத்தையும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்