9 புகையிரதங்கள் இன்று மாலை சேவையில்!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து 9 புகையிரதங்கள் இன்று மாலை சேவையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கடந்த புதன் கிழமை முதல் நாடு முழுவதும் புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்நிலையில் பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் ​சேவைகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிர திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்