கடலில் மூழ்கி மாணவன் பலி!

காரைநகரில் கோவளம் கடற்கரையில் நண்பர்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது. காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு  உயிரிழந்தார்.

குறித்த மாணவன் இந்த வருடம் க. பொ. த. சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்