நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் காலமானார்

​நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் வி.எஸ்.நைபோல் தனது 85ஆவது வயதில் லண்டனில் காலமானார்.

இலக்கிய துறையில் அரிய பணியாற்றி வந்த அன்னார் லண்டனில் நேற்று (சனிக்கிழமை) காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ட்ரினிடாட்டில் 1932 ஆம் ஆண்டு பிறந்த அவர் 2001 ஆம் ஆண்டு இலக்கியத் துறைக்காக நோபல் பரிசை பெற்றிருந்தார். வித்தியாதர் சுரேஷ்பிரஷாட் நெய்போல் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், 1950 ஆம் ஆண்டு தொடக்கம் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்தார்.

அன்று தொடக்கம் நெய்போல் எழுதிய சில நாவல்களுக்கு, குறிப்பாக ‘A House for Mr Biswas’, ‘In a Free State’ மற்றும் ‘A Bend in the River’ போன்றவற்றுக்கு விருதுகளை வென்றிருந்தார். நெய்போலின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவி நதிரா நெய்போல் கூறுகையில், எழுத்துலகில் தனது கணவர் பல அரிய விடயங்களை பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இவரது தந்தையான சீ.பிரசாத் நெய்போலின் பெற்றோர், இந்தியாவில் இருந்துவந்து லண்டலின் குடியேறியுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்றுள்ள நைபோல், 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

1955ஆம் ஆண்டு ‘The Mystic Masseur’ என்ற முதலாவது நாவல் வௌியானது. 1971ஆம் ஆண்டு ‘In a Free State’ என்ற புத்தகத்துக்கான அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு ‘A House for Mr Biswas’ என்ற புத்தகத்துக்காக அந்தாண்டு நோபல் பரிசுநெய்போலுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து கரீபியன் நாட்டில் குடியேறிவர்களை பற்றி இந்த புத்தகம் கூறுகின்றது. அதேவேளை, 1989 ஆம் ஆண்டில் பிரித்தானிய மகாராணி எலிசபெத்திடம் ‘நைட்ஹூட்’ விருதையும் பெற்றார்

நெய்போலின் மறைவுக்கு உலகெங்கும் விரவி வாழும் பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்