இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில்!!

இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது.

2ம் நாள் தொடங்கிய ஆட்டத்தில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. ஆண்டர்சனின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்தியா 35.2 ஓவரில் 107 ரன்னுக்கு ஆல் அவுட்டானதுடன் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அஷ்வின் 29, கோஹ்லி 23, ரகானே 18, பாண்டியா 11, ஷமி 10* ரன் எடுத்தனர்.இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 5, வோக்ஸ் 2, பிராடு, கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மூன்றாம் நாளான நேற்று, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

ஜென்னிங்ஸ் 11, அலஸ்டர் குக் 21, கேப்டன் ஜோ ரூட் 19, போப் 28, பட்லர் 24 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 131 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில் பேர்ஸ்டோ – வோக்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். 55 ஓவர் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்திருந்தது. பேர்ஸ்டோ 62 ரன், வோக்ஸ் 55 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெறுவது உறுதியாகி உள்ளதால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்