இலங்கை – தென்னாபிரிக்கா இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டிக்கான தென்னாப்பிரக்க அணியில் ஹசிம் அம்லா மற்றும் ககிசோ ரபாடா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்கான இலங்கைக் குழாமில் அறிவிக்கப்பட்டிருந்த ஜெஃப்ரி வண்டர்சாய் மற்றும் செஹான் மதுசாங்க ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலாக இசுரு உதான மற்றும் கசுன் ராஜித்த ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் இதுவரையில் இடம்பெற்ற 9, 20க்கு20 போட்டிகளில் ஐந்தில் தென்னாப்பிரிக்காவே வென்றுள்ளது.

அவற்றில் 3 போட்டிகள் இலங்கையில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்