பிரிட்டனில் பாதசாரிகள் மீது காரால் மோதி தாக்குதல் -பலர் படுகாயம் ( வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் வீதியில் சென்றவர்கள் மீது காரினால் மோதி வன்முறையை ஏற்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் பிரித்தானிய நேரடிப்படி இன்று காலை 7.30 இற்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வீதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் பல பாதசாரிகள் காயமடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதிக்கு இரு அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இதுவொரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைவிலங்குடன் நபர் ஒருவரை பொலிஸார் அழைத்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்