தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தியது இலங்கை அணி…

இலங்கை மற்றும் சுற்றுலா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 16.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் டீ கொக் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் லக்‌ஷான் சந்தகென் 3 விக்கட்டுக்களை வீழ்த்திய நிலையில் , அகில தனஞ்சய மற்றும் டீ சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் , 99 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 36 ஓட்டங்களைப் பெற்றார்.

தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்கள்.

அதன்படி , தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது தொடர்களை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்