Jaffna to colombo குறும்படம்…

இடைவேளையில்லாமல் அடுத்தடுத்து படங்களை வழங்கும் ருவுதரன் சந்திரப்பிள்ளையின் மற்றுமொரு இயக்கத்தில் உருவாகி வருகின்ற Jaffna to colombo இன் முதல் பார்வை சமுகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் கவர்ந்து வருகின்றது.

இது இவரின் இயக்கத்தில் உருவான ஏழாவது குறும்படம் ஆகும். இதில் இலங்கையின் பிரபலமிக்க கலைஞர்களுடன் இணைந்து சமுகப்பணி பட்ட மாணவர்களும் நடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

இதற்கு அஜய் ரேமினாத் ஔிப்பதிவினையும் யாசிர் நிசார்தின் படத்தொகுப்பினையும் மேற்கொண்டுள்ளனர் மேலும் இதற்கு உமப்பிரியன் இசையமைத்துள்ளார். இக்குறும்படத்தை அம்மா கிரியேசன் தயாரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்