வரிவிதிப்பதற்கு தயாராகும் அமெரிக்கா-மறைமுகமாக எச்சரிக்கின்றது கனடா!

கனடாவின் வாகன உற்பத்தி தொழில்துறை இறக்குமதிகள் மீது வரிவிதிப்பதற்கு அமெரிக்கா முயலுமாக இருந்தால், முடியுமான அனைத்துவித பதில் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு கனடா தயாராகவுள்ளது என கனேடிய மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நவ்டீப் பைன்ஸ், தெரிவித்துள்ளார்.

கனடாவின் வாகன உற்பத்தி தொழில்துறை இறக்குமதிகள் மீது பாரிய வரிவிதிப்பினை மேற்கொள்ளவதற்கு அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்கா கனடா ஆகிய இரண்டு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் பாரிய சேதாரத்தினை ஏற்படுத்தக்கூடிய வரிவிதிப்பு நடவடிக்கையை கைவிடுமாறு அமெரிக்காவை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளிலேயே கனடா முதல்கட்டமாக ஈடுபட்டுள்ளது.

இந்த விடயத்திற்கு பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகமான தீர்வினைக் காண்பதற்கான வாய்ப்புகளில் இருந்து கனடா இன்னமும் பின்வாங்கவில்லை. இன்னமும் பேச்சுவார்த்தை மேசையில் இந்த விடயத்திற்கான தீர்வினைக் காண்பதற்கே கனடா விரும்புகின்றது.

அதேவேளை இவற்றைத் தாண்டி இந்த வரிவிதிப்பினை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முயலுமாக இருந்தால், முடியுமான அனைத்துவித பதில் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு கனடாவும் தயாராகவே உள்ளதுடன், அது தொடர்பில் பரிசீலித்து வருகின்றது” என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்