உலகளாவிய ரீதியில் இன்று ஹஜ் பெருநாள்

உலகளாவிய ரீதியில் இன்று இஸ்லாமியர்களால் இதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

வசதி படைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்க கடமைகளில் ஈடுபடுவார்கள்.

இற்றைக்கு சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறை தூதர் இப்ராஹிம் நபி அவர்களின் மனைவியான சாரா மூலம் நீண்ட காலத்தின் பின்னர், கிடைத்த ஆண் மகனான இஸ்மாயில் நபி அலி ஸ்லாம் அவர்களை இறைக் கட்டளையின் பிரகாரம் பலியிட துணிந்த வரலாறு இதன்போது நினைவு கூறப்படுகின்றது.

நபி இப்ராஹிம் அலி சலாம் அவர்கள் தமது அன்புக்குரிய மகன் இஸ்மாயில் அலி ஸ்லாம் அவர்களை பலியிட துணிந்த போது, இறைவன் வானவர் ஜிப்ரி அலி சலாம் அவர்கள் மூலம் அதனை தடுத்து ஒரு ஆட்டை இறக்கி வைத்து அதனை பலியிடுமாறு கட்டளையிட்டார்.

இறை தூதுவர் இப்ராஹிம் அலி சலாம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அதேநேரம், ஒற்றுமையின் பெருமையை உலகறியச்செய்யும் ஹஜ்ஜூப் பெருநாளை பிரிவினைகளினால் சிதறிப்போயுள்ள சமுதாயத்தில் மனிதர்களிடையே இருக்க வேண்டிய பரஸ்பர புரிந்துணர்வை கட்டி​யெழுப்ப வாய்ப்பாக்கிக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுயநலமிக்க தன்மையிலிருந்து விலகி, எதிர்கால சந்ததியினரது நலன் கருதி சுய கௌரவத்துடனும் சமாதானமாகவும் வாழ்வதற்குரிய நாட்டை கட்டுயெழுப்ப ஒன்றிணையுமாறு எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் ஹஜ்ஜூப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்